நாள்: சார்வரி வருடம், ஐப்பசி 07 ஆம் நாள், வெள்ளி கிழமை (23/10/2020)
விரதம்: அஷ்டமி பிற்பகல் 12:49 முதல் நாளை பிற்பகல் 12:04 வரை
திதி: சப்தமி பிற்பகல் 12:48 வரை பின்பு அஷ்டமி
நட்சத்திரம்: பூராடம் காலை 07:10 வரை பின்பு உத்திராடம்
சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம்
யோகம்: சித்தயோகம்
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
நல்ல நேரம்:
காலை: 09:15 – 10:15
மாலை: 04:45 – 05:45
தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு: 10:30 – 12:00
குளிகை: 07:00 – 09:00
எமகண்டம்: 03:00 – 04:30
வழிபாடு: மகாலட்சுமியை வழிபட சுபிட்சம் உண்டாகும்
ராசி பலன்கள்:
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே! சுபகாரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்ற வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகன மாற்றங்கள் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே! உயர் அதிகாரிகளின் மூலம் புது அனுபவங்கள் கிடைக்கும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பிரச்சனைகள் குறையும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே! மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலில் லாபம் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் தோன்றும். உத்தியோகத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களே! பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பயணங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். நினைத்ததை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே! பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டாகும். உதவி செய்வதற்கு முன்பு சிந்தித்து செயல்படவும். பணியிடங்களில் கவனம் வேண்டும். மற்றவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகன பயணங்களில் கவனம் வேண்டும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களே! கற்பனைத் திறன் மேம்படும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்வது நல்லது. உடன்பிறப்புகளிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களே! உத்தியோகத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களே! உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றங்கள் ஏற்படலாம். மனதில் குழப்பமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். திருமண வரன் கைகூடும். பொன், பொருள் வாங்க ஆர்வம் காண்பீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களே! மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களே! வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். கணவன் மனைவி இடையே உறவு மேம்படும். சில காரியங்கள் செய்து முடிக்க காலதாமதமாகும். கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களே! பெரியோர்களின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது. வியாபாரம் முதலீடுகளில் நிதானம் வேண்டும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களே! நெருக்கமானவர்களிடம் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பணியிடங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் வரும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழல் நிலவும்