நாள்: சார்வரி வருடம், ஐப்பசி 06 ஆம் நாள், வியாழன் கிழமை (22/10/2020)
விரதம்: சஷ்டி
திதி: சஷ்டி பிற்பகல் 01:51 வரை பின்பு சப்தமி
நட்சத்திரம்: மூலம் காலை 07:39 வரை பின்பு பூராடம்
சந்திராஷ்டமம்: ரோகினி
யோகம்: மரணயோகம் காலை 06:01 வரை பின்பு சித்தயோகம்
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்
நல்ல நேரம்:
காலை: 10:45 – 11:45
மாலை: 12:15 – 01:15
தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு: 01:30 – 03:00 PM
குளிகை: 09:00 – 10:30 AM
எமகண்டம்: 06:00 – 07:30 AM
வழிபாடு: முருகரை வழிபட மேன்மை உண்டாகும்
ராசி பலன்கள்:
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே! குடும்பத்தில் சுபகாரிய செயல்கள் நடக்கும். பெரியோர்களின் ஆசி பெறுவீர்கள். மனதில் நிம்மதி தோன்றும். வாரிசுகளின் மூலம் தொழில் மேம்படும். பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே! உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. உறவினர்களிடம் பொறுமையுடன் இருங்கள். எடுக்கும் முடிவுகளில் நிதானம் வேண்டும். பயணங்களில் மாற்றம் ஏற்படலாம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே! முயற்சிகளின் மூலம் இலக்கை அடைவீர்கள். சுப காரியங்கள் நிறைவேறும். புதுவித அனுபவம் கிடைக்கும். நண்பர்களுடன் பயணங்கள் மேற்கொள்வீர்கள். எதிர்ப்புகளை தாண்டி வெற்றி அடைவீர்கள். மனதில் புது வித சிந்தனைகள் தோன்றும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களே! புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். தொழிலில் லாபம் கிடைக்கும். சேமிப்புகள் அதிகரிக்கும். பயணங்களில் கவனம் வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே! தொழிலில் லாபம் காண்பீர்கள். வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சாதுர்யமான பேச்சுகளின் மூலம் வெற்றி பெறுவீர்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களே! குடும்பத்தில் ஒற்றுமை தோன்றும். சுப செய்திகள் வந்து சேரும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் செலவுகளை குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களே! எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும். வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களே! உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. துணைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் லாபம் கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களே! கடன் பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் நல்ல சூழல் நிலவும். உத்தியோகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செலவுகளை குறைப்பது நல்லது.
மகரம்:
மகர ராசிக்காரர்களே! புதுவித அனுபவங்கள் கிடைக்கும். பயணங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கற்பனைத் திறன் மேம்படும். பிரபலமானவர்களின் உதவி கிடைக்கும். மனதில் புது வித மகிழ்ச்சி தோன்றும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களே! எதிர்பார்க்காத ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். திருமண வரம் கைகூடும். பொருள், வாங்க ஆர்வம் காண்பீர்கள். பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டாகும். இன்று உங்களுக்கு சாதகமான நாள்.
மீனம்:
மீன ராசிக்காரர்களே! குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் மனைவி இடையே உறவு மேம்படும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சுப காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தொழிலில் லாபம் கிடைக்கும்.