பூமியின் காணாமல் போன 8வது கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது!!! புவியியலாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சியான தகவல்!!!
நம்முடைய பூமியின் 8வது கண்டம் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக புவியியலாளர்கள் அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
நமது பூமியில் தற்பொழுது வரை ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா ஆகிய ஏழு கண்டங்கள் உள்ளது. இருப்பினும் பூமியில் எட்டாவது கண்டம் இருந்ததாகவும் கடல்கோள் என்று அழைக்கப்படும் அழிவு மூலமாக பூமியின் 8வது கண்டம் அழிந்து விட்டதாகவும் புவியியலாளர்கள் நீண்டகாலமாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பூமியின் காணாமல் போன 8வது கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது என்று கடந்த 2017ம் ஆண்டு விஞ்ஞானிகள் அறிவித்தனர். காணாமல் போன 8வது கண்டத்தின் ஒரு பகுதிதான் 1642ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நியூசிலாந்து என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இது தொடர்பான வரைபடத்தையும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
100 சதவீதம் நீருக்கு மேல் இருந்த 8வது கண்டத்தின் நிலப்பரப்பில் 94 சதவீதம் நீருக்குள் மூழ்கியுள்ளது. மேலும் நாம் தற்பொழுது காணும் நியூசிலாந்து தான் 8வது கண்டத்தின் 6 சதவீத நிலப்பரப்பு ஆகும் என்று புவியியலாளர்கள் கூறுகின்றனர்.
மர்மங்கள் அடங்கிய பசுபிக் பெருங்கடலில் 3500 அடி ஆழத்தில் இந்த எட்டாவது கண்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டாவது கண்டத்திற்கு ஜிலாண்டியா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா, இந்திய துணைகண்டம் ஆகிய ஐந்தும் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றாக இணைந்து கோண்ட்வானா என்ற பெயரில் ஒரே நிலப்பரப்பாக இருந்தது என்றும் அந்த நிலப்பரப்பு தனித்தனியாக பிரிந்து பல கண்டங்களாக உருவானது என்றும் அந்த கோண்ட்வானா என்ற நிலப்பரப்பில் இருந்து பிரிந்து சென்றது தான் ஜிலாண்டியா என்றும் புவியியலாளர்கள் கூறுகின்றனர்.
தற்பொழுது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஜிலாண்டியா கண்டத்தின் மொத்த நிலப்பரப்பு 5 மில்லியன் சதுர கிமீ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி ஜிலாண்டியா கண்டம் மடகாஸ்கரை விட 6 மடங்கு பெரியது ஆகும்.