முதல் பெண் பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம்!! திமுக எம்.பி யால் நேர்ந்த வேதனை!!
கோவை மாவட்டம் வடவள்ளியைச் சேர்ந்த ஷர்மிளா. இவர் தந்தையை பார்த்து முதலில் ஆட்டோ ஓட்டுநராக ஆசைப்பட்டார்.
அதன் பிறகு தந்தையிடம் கற்றுக்கொண்டு ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநராகவும் இருந்துள்ளார். மேலும் இவர் கனரக வாகனங்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார்.
அதனையடுத்து கோவை மாவட்ட தனியார் பேருந்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் கோவை மாவட்டம் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றார். இதனை பலரும் பாராட்டினார்.
மேலும் இவரை பல அரசியில் கட்சி தலைவர்களும் பாராட்டி வருகிறார்கள். சில நாள் முன்பு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இவருக்கு வாழ்த்து கூறியிருந்தார் . இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை திமுக எம்.பி. கனிமொழி அவரை சந்தித்து வாழ்த்து தெரவித்தார். அதன் பின் பேருந்தில் பயணித்தார். கனிமொழி பயணித்தபோது அவருடன் வந்தவர்களும் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு பயணித்தனர். இந்நிலையில் ஷர்மிளா பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவரிடம் கேட்ட போது நான் பேருந்தில் ஆட்களை ஏற்றுவது விளம்பரத்திற்காக என்று பேருந்து உரிமையாளர் கூறியது எனக்கு மிகவும்வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையதிலிருந்து சோமனூர் செல்லும் வழித்தடத்தில் ஷர்மிளா பேருந்தை ஓட்டியது குறிப்பிடத்தக்கது.