“மறக்குமா நெஞ்சம்” இனி மறக்காதே நெஞ்சம்:
இசை புயல் என அழைக்கப்படும் ஏ. ஆர்.ரகுமான் அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவரது முதல் திரைப்படமான ரோஜா, இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்தது. அப்படத்தினை தொடர்ந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக கொடிகட்டி பறந்தவர் இவர். ஆஸ்கார், தேசிய விருதுகள், பத்மபூஷன், என பல சிறப்புமிகு விருதுகளை பெற்றவர். இவர் கோலிவுட் இல்லாமல் ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அதேசமயம் இவர் உலகம் முழுவதும் நடைபெறும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நேற்று அவரது “மறக்குமா நெஞ்சம்”எனும் இசை நிகழ்ச்சியை நடத்தினார். இந்த இசை நிகழ்ச்சி அவருக்கு, அவரது ரசிகர்களுக்கும், பெரும் துயரத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சிக்காக, பெங்களூர், மதுரை,கோவை ,போன்ற பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் சென்னையில் குவிந்தனர். அவர்கள் மட்டுமல்லாமல் சென்னை மக்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தும் விதமாக நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சி அமைந்தது.இந்த இசை நிகழ்ச்சியில் சரியான வழிகாட்டுதல் இல்லாமலும், கூட்ட நெரிசல் காரணமாகவும், மக்கள் திணறினர்.அதிக பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்கின ரசிகர்கள் அனைவருக்கும் உட்கார இடம் இல்லாமல் இந்த நிகிழ்ச்சியானது அமைந்தது.
இந்த இசை நிகழ்ச்சிக்கான மக்கள் கூட்டம் அதிகரித்ததால் ஈசிஆர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் மக்கள் உள்ளே செல்லவும் முடியாமல் வெளியே போகவும் முடியாமல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக இது அமைந்தது.
போக்குவரத்துக்கு இடையூறாகவும், சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமலும், கொடுத்த காசுக்கு மதிப்பு இல்லாத காரணத்தினால் நேற்று நடைபெற்ற ஏ . ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியானது ரசிகர்களிடையே வெறுப்பை உண்டாக்க செய்துள்ளது
மக்களின் கருத்தாக: பல்வேறு இசை ஜாம்பவான்களின் நிகழ்ச்சிக்கு எல்லாம் சென்றுள்ளோம்,ஆனால் இப்படிப்பட்ட ஒரு மோசமான நிகழ்ச்சிக்கு வந்ததை நினைத்து வருந்துகிறோம். இதனால் எங்கள் பணமும் நேரமும் தான் வீணாகிவிட்டது என ஆத்திரம் தெரிவித்துள்ளனர்