பட்டப்பகலில் நடுரோட்டில் அலுவலக வேலைக்காக கொடுக்கப்பட்ட காரில் அதிகாரி ஒருவர் இளம்பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் ஐக்கிய நாடுகளின் சபைக்கு பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கு அந்நாட்டு அரசின் சார்பாக கார் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அலுவலகப் பணிக்காக வழங்கப்பட்ட அந்த கார் பட்டப்பகலில், நடுரோட்டில் சிக்னல் ஒன்றின் முன்பு நின்றுகொண்டிருந்த இந்நிலையில் காரின் பின்னால் உள்ள இருக்கையில் அமர்ந்திருக்கும் ஆண் சிவப்பு நிற உடையணிந்த பெண் ஒருவருடன் உல்லாசத்தில் ஈடுபடும் காட்சிகளை மறைமுகமாக யாரோ ஒருவரால் பதிவு செய்யப்பட்டு சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இணையத்தில் வெளியான இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாகிய சூழ்நிலையில் நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஐ.நா சபை விசாரணையை ஆரம்பித்துள்ளது. மேலும் அரசு அலுவலக பணிக்காக கொடுக்கப்பட்ட காரில், அதுவும் பட்டபகலில், நடுரோட்டில் உல்லாசத்தில் ஈடுபட்ட இந்த சம்பவத்தை பார்த்த பலரும் தங்களது கண்டனங்களைப் தெரிவித்து வருகிறார்கள்.