விட்டதை பிடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்!! இது ‘நாம ஜெயிச்சுட்டோம் மாற’ தருணம்!!
இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவ பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
பல்வேறு இக்கட்டான கட்டங்களை அசால்ட்டாக கடந்து நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திரயான் 3 நிலை நிறுத்தப்பட்டது.இதை தொடர்ந்து விக்ரம் லேண்டர் நிலவை புகைப்படம் எடுத்து தொடர்ந்து இஸ்ரோ தளத்திற்கு அனுப்பி வந்தது.இந்நிலையில் உலக நாடுகளே எதிர்பார்த்து காத்திருந்த அந்த ஒரு நிகழ்வு இன்று மாலை சுமார் 6:02 மணியளவில் வெற்றிகரமாக நடந்தது.சந்திரயான் 3 விண்கலம் இஸ்ரோவின் கணிப்பு படி நிலவின் தென்துருவ பள்ளத்தாக்கு பகுதியில் தரையிறங்கியது.இதற்கு முன்னதாக மாலை 5.30 மணியளவில் லேண்டரின் உயரத்தை படிப்படியாக குறைத்து தரையிறக்கும் பணியினை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் விட முயற்சியின் மூலம் அமெரிக்கா,ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை தொடர்ந்து தற்பொழுது இந்தியா நிலவில் கால் பதித்துள்ளது.சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக நிலை கொண்டதை தொடர்ந்து “இந்தியா நிலவில் உள்ளது” என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவை ஆய்வு செய்வதற்காக விண்ணிற்கு ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்க இருந்த தருணத்தில் லேண்டர் பாதை மாறி அதன் கட்டுப்பாட்டை இழந்தது.இந்நிலையில் தற்பொழுது சந்திராயன் 3 விண்கலம் வெற்றி கரமாக தரையிறக்கப்பட்டதன் மூலம் நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் விண்கலம் என்ற சாதனையை படைத்துள்ளது.இதற்கு முன்னதாக நிலவின் தென்துருவ பகுதியை முதலில் அடைய வேண்டும் என்று ரஷ்யா அனுப்பிய ‘லூனா 25’ விண்கலம் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.