இன்ஸ்டாகிராம் மூலம் கோலிக்கு இவ்வளவு கோடி வருமானமா… இரண்டாவது இடத்தில் இருப்பவர் யார் என்று பாருங்கள்…
இன்ஸ்டாகிராம் செயலி மூலமாக அதிக வருமானம் ஈட்டுவோர்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. முதலிடத்தில் விராட் கோலி இருக்கிறார்.
யூடியூப் நிறுவனம் போலவே எக்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக வருமானம் ஈட்டும் வாய்ப்பு அனைவருக்கும் இருக்கின்றது. ஆனால் சில விதிமுறைகள் உள்ளது. அந்த வகையில் பிரபலமானவர்களுக்கு இந்த சமூக வலைதளங்கள் மூலமாக வருமானம் ஈட்டுவது சற்று எளிது.
அந்த வகையில் இந்திய அளவில் இன்ஸ்டாகிராம் செயலி மூலமாக பிரபல கிரிக்கெட் வீரர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அவர்கள் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி இன்ஸ்டாகிராம் செயலியில் பதிவிடும் ஒரு போஸ்டுக்கு 11.45 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கின்றது.
விராட் கோலியை தொடர்ந்து முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளார். மகேந்திர சிங் தோனி அவர்கள் பதிவிடும் ஒரு போஸ்டுக்கு 1.44 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கின்றது.
தோனியை தொடர்ந்து ரோகித் சர்மா(76 லட்சம்), ஹர்திக் பாண்டியா(65 லட்சம்), சுரேஷ் ரெய்னா(34 லட்சம்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
உலக அளவில் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் வருமானம் ஈட்டுவோர்களின் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிவிடும் ஒரு போஸ்டுக்கு 26.75 கோடி ரூபாய் வருமானமாக கிடைக்கின்றது. மற்றொரு புகழ்பெற்ற கால்பந்து வீரரான லயனல் மெஸ்ஸி பதிவிடும் ஒரு போஸ்டுக்கு 21.49 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.
உலக அளவில் இன்ஸ்டாகிராம் செயலி மூலமாக வருமானம் ஈட்டுவோர்களின் முதல் 20 பேர்களின் பட்டியலில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி அவர்கள் இடம் பெற்றுள்ளார். இதையடுத்து உலக அளவில் இன்ஸ்டாகிராம் மூலமாக அதிக வருமானம் ஈட்டுவோர்களின் டாப் 20 பேர்களின் பட்டியலில் இடம் பொற்ற ஒரே ஒரு இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி அவர்கள் உருவாக்கியுள்ளார்.