தன் கணவரை குழந்தைகளை கவனித்துக் கொள் என்று கூறிய லேடிஸ் சூப்பர் ஸ்டார்!! நான் இனி ரொம்ப பிசி!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணத்திற்கு பிறகு கம்பேக் கொடுக்கும் வகையில் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சென்ற ஆண்டு அவரது நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல், ஓ2, கனெக்ட், மலையாளத்தில் கோல்ட், தெலுங்கு காட்பாதர் ஆகிய ஐந்து படங்கள் வெளியாகின. தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் படத்தில் நடித்து வருகிறார், மேலும் ஹிந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா.
அதுமட்டுமில்லாமல் இரண்டு புது படங்களில் நயன்தாரா கமிட் ஆகி உள்ளாராம் அதில் ஒரு படம் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்த நயன்தாரா மித்ரன் ஜவஹரும் இயக்கத்தில் தற்போது நடிக்க இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தனி ஒருவன் பாகம் 2 படப்படும் தொடங்கிய நிலையில் நயன்தாராவிற்கு அடுத்தடுத்த படங்கள் வரிசையில் வந்து குவிக்கின்றன