Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

அஜித் பட நடிகைக்கு 14 வயதில் நடந்த கொடுமை!

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் ஓரளவு ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் தான் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் பெரும்பாலும் கன்னடம் மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளியான கன்னட உளவியல் மற்றும் திகில் திரைப்படமான யு டர்னில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும் இவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்திலும் இவரின் நடிப்பானது பாராட்டப்பட்டது.

அடிப்படையில் கன்னட நடிகையான இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தற்போது கணிசமான படவாய்ப்புகள் வந்த வண்ணமேயுள்ளது. அந்த வகையில் அடுத்ததாக தமிழில் இவரது நடிப்பில் விஷாலுடன் உருவான சக்ரா படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் திடீரென பரபரப்பை கிளப்பும் வகையில் பேட்டி ஒன்றை கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதாவது கடவுள் ஒரு பெண்ணை ஏன் இவ்வளவு சங்கடமான நிலைக்கு தள்ளி விட்டார் என கடவுள் மீதான நம்பிக்கை குறையும் வகையில் தனது 14 வயதில் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

அஜித் பட நடிகைக்கு 14 வயதில் நடந்த கொடுமை!

அதாவது பெண்களுக்கு மாதா மாதம் நிகழும் மாதவிடாய் குறித்து தான் தான் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது 14 வயதில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் தனது உறவினர் ஒருவரின் குடும்ப பூஜையில் கலந்து கொண்டதாகவும், அப்போது திடீரென அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அந்த உறவினரிடம் அவர் கூறிக் கொண்டிருந்த நிலையில் வேறு ஒருவர் இதை ஒட்டுகேட்டு விட்டு, உன்னை கடவுள் மன்னித்து விடுவார் என்று ஆறுதலாக கூறியது தன்னை கோபப்படுத்தியது என்று அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

கடவுள் தான் பெண்களுக்கு இப்படி ஒரு பிரச்சனையை கொடுத்துள்ளார் எனவும், அந்த நாட்களில் அவரை பெண்கள் பார்க்க கூடாது எனவும் ஒரு கட்டளை விதிக்கப்பட்டு இருப்பதாக அவர் மிகவும் மனம் நொந்துபோய் தெரிவித்துள்ளார்.

இதனால் கடவுளும் பெண்களுக்கு ஓரவஞ்சனை செய்து விட்டதாக மிகவும் வருத்தத்துடன் செய்தி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அந்த கருத்து பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Comment