மீண்டும் மதம் மாறினார் நயன்தாரா !
தமிழ் சினிமாவை பொறுத்தவரை திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நயன்தாரா, இளம் நடிகர்கள் தொடங்கி முன்னணி நடிகர்கள் வரை நயன்தாராவின் திரை வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் நாட்கள்தான் தற்போது தமிழ் சினிமாவில் உருவாகியுள்ளது.
நயன்தாராவை பொறுத்தவரை அவரது தாய் மாநிலம் கேரளா, அவரது ரியல் நேம் (பிறப்பின் படி ) டயானா மரியம் குரியன் 1984-ம் ஆண்டு நவம்பர் 18-ம் நாள் பிறந்தவர், பிறப்பின் படி கிறிஸ்துவரான இவர், தமிழ் சினிமாவில் ஏற்பட்ட ஈடுபாட்டின் காரணமாகவும், நடிகர் பிரபுதேவாவுடன் ஏற்பட்ட காதலின் காரணமாகவும் பிறந்த மதமான கிறிஸ்துவத்தில் இருந்து இந்து மதத்திற்கு சென்னையில் உள்ள ஆர்ய சாம்ராஜ் கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டு மதம் மாறினார், பின்னர் சிறிது காலத்திற்கு பிறகு.,
பிரபுதேவாவுடன் ஏற்பட்ட தனிப்பட்ட பிரிவின் காரணமாக மீண்டும் கிறிஸ்துவ மதத்திற்கு திரும்பிய நயன்தாரா, சர்ச் மற்றும் கிறிஸ்துவ வழிபாட்டு தளங்களுக்கு சென்று வந்தார், இந்நிலையில் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட காதலின் காரணமாக நயன்தாரா பழைய பழக்க வழக்கங்கள் அனைத்தையும் மாற்றி கொண்டதுடன் இனி வாழ்நாள் முழுவதும் இந்து மதத்தில் மட்டுமே இருக்க போவதாகவும், விக்னேஷ் சிவன் குடும்பத்தினருடன் வாக்குறுதி அளித்துள்ளாராம் நயன்தாரா.,
எனவே தற்போது தமிழ் சினிமாவில் பிறந்த மதத்தில் இருந்து இந்து மதம் திரும்பிய முன்னணி நடிகைகள் வரிசையில் குஷ்பு, சமந்தா வரிசையில் மீண்டும் இணைத்துள்ளார் நயன்தாரா !