NeoCov Virus – நியோகோவ் வைரஸ்! கொரோனாவை தொடர்ந்து உருவான அடுத்த பிரச்சனை
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது.இந்நிலையில் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் அடுத்தடுத்து உருமாறிய கொரோனா வைரசின் கண்டுபிடிப்பானது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவே அமைந்து வருகிறது.
அந்தவகையில் தற்போது நியோகோவ் கொரோனா வைரஸ் என்ற அடுத்த வகை வைரசை சீன விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளது மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த வைரஸ் குறித்து மேலும் ஆய்வுகள் தேவை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது தற்போதைக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
இந்த NeoCov Virus – நியோகோவ் வைரஸ்! கொரோனாவை போலவே மனிதனில் உயிரணுக்களை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.அதே போல தற்போதுள்ள கொரோனா தடுப்பூசி எதுவும் இந்த வைரசை எதிர்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.