பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வேறு வகையான திட்டத்தை செயல்படுத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரியில் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒருநாள் வைரஸின் பாதிப்பானது நாளுக்குநாள் மேலும் அதிகரித்து வருவதால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
இதனையடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீதமும், அவர்களின் வருகை சதவீதத்தின் அடிப்படையில் 20 விதமும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.
இந்நிலையில் பல்வேறு தனியார் பள்ளிகள் இந்த முறைப்படி மதிப்பெண் வழங் குவதற்கு மாணவர்களிடமிருந்து பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டைக் கருத்தில் கொண்ட பள்ளிக்கல்வித்துறை இந்த முறைப்படி மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதியதால் திட்டத்தை செயல்படுத்த ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கு பதிலாக கிரேடு முறையில் தேர்ச்சி வழங்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கு பிறகு இது தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பின்னர் தமிழக முதல்வரின் ஒப்புதல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.