ஓ.பன்னீர்செல்வத்திற்க்கு பேரிடியை இறக்கிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு!
அ.தி.மு.கவின் கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக கட்சியில் இருந்து நீக்கியது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பொதுக்குழு தீர்மானித்தது.
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
எனவே, ஓ. பன்னீர்செல்வத்தை நீக்கியது தொடர்பான வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுக்குழுவின் தீர்மானம் செல்லும், அதிமுகவின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த கூடாது என தடை விதித்தது.
ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த இடைகாலத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை நிரந்தர தடை விதித்து தீர்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியிட்டு அ.தி.மு.கவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் தேர்தலை சந்திக்கவுள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் கூறிவரும் நிலையில் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்க்கு பேரிடியாக மாறியுள்ளது.