பொதுமக்கள் ஜாக்கிரதை!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 25 மாவட்டங்களில் கன மழை!!
சென்னை உட்பட 25 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் , மேற்கு திசை காற்றின் வேகமாறுபாட்டின் காரணத்தினாலும் ஜூலை 5 முதல் ஜூலை 8 வரை தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தகவல் தெரிவித்து இருந்தது.
இதனால் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கருதியதால் பள்ளிக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உட்பட 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, சேலம், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் இடி, மின்னலுக்கு வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் யாரும் மரத்தின் அடியிலோ, அல்லது மின் கம்பத்தின் அடியிலோ நிற்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.