உச்ச கட்ட கவர்ச்சி ஆட்டம் போட்ட ரகுல் பரீத் சிங் – வைரலாகும் வீடியோ
தென்னிந்திய திரைப்பட நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான கில்லி என்கிற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அடுத்ததாக 2012 ஆம் ஆண்டு தமிழில் அருண் விஜய் நடித்து வெளிவந்த தடையற தாக்க திரைப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தான் இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படமாகும்.
இதற்கு அடுத்து இவர் 2017 ஆம் ஆண்டு தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.
நடிகர் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்த ரகுல் பிரீத் சிங், தற்போது கமலின் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
அதோடு, ஹிந்தி, தெலுங்கிலும் நடித்து வரும் அவர், ஹிந்தியில் சித்தார்த் மல்கோத்ரா, ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ள மர்ஜாவான் என்ற படத்தில் நடித்துள்ளார்.
வரும் நவம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தில் ஹய்யா ஹோ என்ற பாடலுக்கு ரகுல் பிரீத் சிங் இதுவரை இல்லாத அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். இந்த படத்தின் வீடியோ பாடல் இரு தினங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் இந்த படலை சுமார் 51 லட்சம் பேரும், தற்போது வரை 75 லட்சம் பேரும் பார்த்து ரசித்துள்ளனர்.
அந்த பாடல் இதோ உங்களுக்காக