இசை நிகழ்ச்சி டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி தருகிறேன்!!! இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அறிவிப்பு!!!
இசை நிகழ்சிக்கான டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பித் தருகிறேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் அறிவித்துள்ளார். இதையடுத்து டிக்கெட்டுகளுக்கான பணத்தை திரும்ப செலுத்தும் பணி தொடங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் கடந்த ஞாயிற்று கிழமை சென்னை கிழற்கு கடற்கரை சாலையித் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான திறந்தவெளி அரங்கில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் கன்செர்ட் அதாவது இசை நிகழ்ச்சி நடத்தினார்.
மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சியை காண பெரும்பாலான ரசிகர்கள் குவிந்தனர். இதனால் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியை காண வந்த ரசிகர்களுக்கு நெஞ்சம் மறக்க முடியாத மோசமான அனுபவத்தை அந்த நிகழ்ச்சி கொடுத்துள்ளது. அந்த அளவுக்கு பல குழப்பங்கள் நடந்துள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியை காண்பதற்கு 2000 முதல் 25000 ரூபாய் வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் 5000 ரூபாய், 10000 ரூபாய், 25000 ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகள் வாங்கிய ரசிகர்களால் கூட மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியை காண முடியவில்லை. பல ரசிகர்கள் டிக்கெட்டுகள் வாங்கியும் நின்று கொண்டு இசை நிகழ்ச்சியை பார்த்தனர். அது மட்டுமில்லாமல் கடும் போக்குவரத்து நெரிசல் போன்றவைகளால் ரசிகர்கள் அவதிப்பட்டனர்.
இதையடுத்து ஏமாற்றம் அடைந்து கோபம் கொண்ட ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி தொடர்பான புகார்களை பதிவிட்டு வந்தனர். ரசிகர்கள் பலரும் தங்கள் ஆவேசமான கருத்துக்கள் மூலமாக ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் மீது சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்தனர்.
இந்த நிகழ்விற்கு விளக்கம் அளித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் “மக்கள் விழித்துக் கொள்வதற்கு இந்த முறை நானே பலியாடு ஆகின்றேன். நடந்த குழப்பங்களுக்கும் குளறுபடிகளுக்கும் நானே பொறுப்பேற்கின்றேன். இசை நிகழ்ச்சியை காண வந்து பார்க்க முடியாமல் அரங்கிற்குள் நுழைய முடியாமல் போனவர்கள் அனைவரும் உங்களுடைய டிக்கெட் காப்பிகளை எங்களுக்கு அனுப்பி வைய்யுங்கள். எங்களுடைய குழுவினர் உடனடியாக உங்களுக்கு பதில் கொடுப்பார்கள்” என்று ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு நாங்களும் காரணம் என்று நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டது. மேலும் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியை காணமுடியாமல் சென்ற ரசிகர்களிடமும் அவதிப்பட்ட ரசிகர்களிடமும் அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இசைப் புயல் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் அறிவித்தது போலவே டிக்கெட் வாங்கியும் இசை நிகழ்ச்சியை காணமுடியாமல் சென்ற ரசிகர்களுக்கு நேற்று(செப்டம்பர்12) இரவு முதல் டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி அளிக்கும் பணி துவங்கப்பட்டு டிக்கெட்டுக்கான பணங்கள் திருப்பி அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் அறிவித்ததில் இருந்து அவருடயை குழுவிற்கு 4000 மெயில்கள் வந்துள்ளதாகவும் அதில் முதல் கட்டமாக 400 பேருக்கு டிக்கெட்டுக்கான பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிய்கியுள்ளது.