அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கஇதுவே கடைசி நாள்!! அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்காக விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பை அமைச்சர் பொன்முடி அவர்கள் வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
பன்னிரன்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்காக விண்ணப்பிக்கும் தேதி இன்று அதாவது மே 19ம் தேதியுடன் முடிவடைகிறது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான இணைய விண்ணப்ப பதிவு கடந்த 8ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 2,37,985 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இன்றுடன் முடியும் என்று அறிவிக்கப்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரி படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார்.
விருப்பம் உள்ள மாணவர்கள் https://www.tngasa.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் மே மாதம் 23ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மே 25ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி வரை பல்வேறு வகையில் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22ம் தேதா முதல் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது
ADVERTISEMENT