இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! எவ்வளவு அதிகரித்து இருக்கிறது?
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து விற்பனை செய்யப்படுகின்றது.வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்துள்ளது.
சென்னை,
நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கின்ற தங்கத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.தங்கம் என்பது ஒரு அணிகலனாகவும் ஒரு சிறந்த சேமிப்பாகவும் இருக்கின்றது.இன்றைய காலகட்டத்தில் தங்கத்தை சேமிப்பது அவசியமான ஒன்றாகிவிட்டது.சாமானியர்ககளுக்கு அவசர காலங்களில் உதவும் பொருளாக இவை இருக்கின்றது.இத்தனை சிறப்புடைய தங்கத்தின் விலை உயர்வதும்,குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும்,கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.மே மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து கணிசமாக குறைந்து வருகிறது.நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு
ரூ.44,280 என்று விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன் தங்கம் விலை மளமளவென அதிகரித்து விற்பனையான நிலையில் நேற்று சற்று விலை குறைந்தது.இந்நிலையில் இதன் விலை இன்று மீண்டும் அதிகரித்து இருக்கிறது.
அதன்படி,சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 அதிகரித்து ரூ.44,440க்கும்,ஒரு கிராம் ரூ.20 அதிகரித்து ரூ.5,555க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.அதேபோல் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.48,392க்கு விற்பனை செய்யப்படுகின்றது.நேற்று விலையை ஒப்பிடும் பொழுது இன்று 80 அதிகரித்துள்ளது.
மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.80க்கும்,ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.நேற்று தங்கம் சற்று விலை குறைந்து விற்கப்பட்ட நிலையில் இன்று இதன் விலை அதிகரித்து இருப்பது சாமானிய மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.