தலைவாசல் விஜய் மகளுக்கு டும் டும் டும்!! மாப்பிள்ளை ஒரு கிரிக்கெட் வீரரா!
தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் தலைவாசல் விஜய். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். அதோடு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்களின் மனதை இடம் பிடித்தவர்.
ஆவார் கடந்த 1992 ஆம் வருடம் தலைவாசல் என்ற படத்தில் தான் இவர் அறிமுகமாகி இருக்கிறார். ஆதலால் இவரை தலைவாசல் விஜய் என்று அழைக்க தொடங்கினர் மக்கள்.
31 வருடத் திரை பயண வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர். இவர் கடைசியாக 100% காதல் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பிறகு சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்த இவர் சன் டிவியின் மாபெரும் வெற்றியை தந்த அழகு சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளாள் அவர் பெயர் ஜெய வீனா. தலைவாசல் விஜயின் மகள் ஓர் நீச்சல் வீராங்கனை ஆவார்.
மேலும் பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை பெற்று இருக்கிறார். தற்போது தலைவாசல் விஜயின் மகள் ஜெயவீனா விற்கும், பிரபல கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித்திற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது