காயத்திலிருந்து குணமடைந்த விஜய் ஆண்டனி!! தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தி வைரலாகி வருகிறது!
சமீபத்தில் பிச்சைக்காரன் 2 படத்தின் போது நடிகர் விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இது அவரது படப்பிடிப்பிற்கும் மற்றும் ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அவர் குணமடைந்து வர வேண்டும் என்று பல ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர் இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் ஆண்டனி தன் 90 சதவீதம் குணமடைந்து விட்டதாகவும் உடைந்து போன தனது தாடை மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்து விட்டதாகவும் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
இதனைக் கண்ட ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர் இந்த மகிழ்ச்சியோடு மட்டுமல்லாமல் தனது பிச்சைக்காரன் 2 பட ட்ரெய்லரின் ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு பேரின்பம் அளித்தார். வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை மீண்டும் துவங்குகிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் விஜய் ஆண்டனி தன் விட்ட பக்கத்தில் “வடக்கனும் கிழக்கனும் தெற்கணும் மேற்கணும்…..”, நம்மை போல் தான் குடும்பத்தை காப்பாற்ற தினமும் போராடி வாழும் இன்னொரு சக ஏழை மனிதன் தான். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்களும் திரைப்பட உலகங்களும் மிரண்டு போய் உள்ளனர்.