ஸ்ரீமதி வழக்கு! தாய் செல்விக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வருகின்றது. மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த பொழுது புலன் விசாரணை விரைவில் நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை நேற்று நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.சிபிசிஐடி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இந்த விசாரணை முடியும் வரை இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மாணவியின் பெற்றோர் தரப்பிற்கு வழங்க கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.இதனையடுத்து இந்த வழக்கிற்கு புலன்விசாரணைக்கு அவருடைய பெற்றோர் ஒத்துழைக்கவில்லை மற்றும் மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய மொபைல் போனை வழங்க அவர்கள் மறுப்பு தெரிவிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகின்றது.மேலும் மாணவி விடுதியில் செல்போன் பயன்படுத்தியிருந்தால் அதனை போலீசாரிடம் வழங்க வேண்டும் என பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.