சேலத்தில் கோர விபத்து! அரசு பேருந்து மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதல்!
இன்று காலை கோவையிலிருந்து சேலம் நோக்கி அரசு விரைவு பேருந்து வந்து கொண்டிருந்தத.அந்த பேருந்தானது காலை 6.30 அளவில் சேலம் மூன்று ரோடு ஜவகர் மில் எதிரில் வந்து கொண்டிருந்தது.அந்த பகுதியல் உள்ள ஒரு ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கண்டெய்னர் மற்றும் பேருந்துகள் விபத்தில் சிக்கியதால் அதனை மீட்பதற்காக பயன்படுத்தும் கிரேன் சாலையில் குறுக்கே வந்து திருகவுண்டனூர் பைபாஸ் சாலையை நோக்கி திரும்பியது.
அப்போது அந்த அரசு பேருந்தானது எதிர்பாராதவிதமாக கிரேன் மீது மோதியது.அந்த விபத்தில் அரசு பேருந்தின் முன்பக்கம் நொறுங்கியது.மேலும் இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கம் அமர்ந்திருந்த நடத்துனர் மற்றும் பயணிகள் ,ஓட்டுனர் உட்பட 10 பேர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்கள்.இந்த விபத்து குறித்து பள்ளப்பட்டி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கிய பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.மேலும் கிரேனை ஓட்டி வந்த சென்னையை சேர்ந்த டிரைவர் சந்தன ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சாலையின் குறுக்கே கிரேன் வருவதை அறிந்த பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.