சேலையில் கேஷுவல் லுக்கில் அசத்தும் பிரியா பவானி சங்கர்!!
தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய இவர் கல்யாணம் முதல் காதல் வரை தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலமாக பிரபலமானார்.
அந்த வகையில் சின்னத்திரையில் நடித்த அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவருடைய இயல்பான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக அவர் நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் ஹிட் ஆகி வருகிறது. அந்த வகையில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணமே உள்ளதால் படு பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். பெரும்பாலான இடங்களில் கவர்ச்சிக் காட்டாமல் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிப்பில் பிஸியாக இருந்தாலும் தனது ரசிகர்களுடன் ஆக்டிவாக இருக்க நினைக்கும் அவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது சேலையில் கேஷுவல் லுக்கில் இருக்கும் ஒரு அசத்தலான புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.