அடிக்கடி உதட்டில் முத்தம் கொடுத்த கணவர்! கடுப்பாகி நாக்கை கடித்து துப்பிய மனைவி!!
அடிக்கடி வலுக்கட்டாயமாக உதட்டில் முத்தம் கொடுத்த கணவரின் நாக்கை மனைவி கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதட்டில் கொடுக்கப்படும் முத்தம் காரணமாக உடலில் பல நன்மைகள் ஏற்படுகின்றது என்றாலும் முத்தம் கொடுக்கும் பொழுது நம் உடலில் இரத்த அணுக்களில் இருக்கக்கூடிய ஒவ்வொரு செல்லும் உற்சாகம் அடைகின்றது. அன்பான முத்தம் முதல் மருத்துவ முத்தம் வரை பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் பல உள்ளன. நாம் வாங்கும் அல்லது நாம் கொடுக்கும் ஒவ்வொரு முத்தமும் நமது மனதின் அடியின் வரை சென்று நமக்கு மகிழ்ச்சியை தூண்டி விடுகின்றது என்று கூறலாம்.
இந்த நிலையில் ஆந்திராவில் கணவர் ஆசையாக முத்தம் கொடுக்க வரும் பொழுது கணவரின் நாக்கை மனைவி கடித்து துப்பிய சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூர் மாவட்டத்தில் வசிக்கும் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. சண்டையில் மனைவியை சமாதனப்படுத்த வேண்டும் என்று கணவன் மனைவிக்கு உதட்டில் முத்தம் கொடுக்க அதாவது லிப் கிஸ் கொடுக்க முயன்றுள்ளார்.
ஆனால் உதட்டில் முத்தம் கொடுப்பதில் மனைவிக்கு விருப்பம் இல்லாத நிலையில் கணவர் மனைவிக்கு வலுக்கட்டாயமாக உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். இந்நிலையில் லிப்கிஸ் கொடுக்க வந்த கணவரின் நாக்கை மனைவி கடித்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்த கணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து வலுக்கட்டாயமாக கணவர் தனக்கு உதட்டில் முத்தம் கொடுக்க முயன்றதால் தான் நாக்கை கடித்ததாக மனைவி காவல்துறையினரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடிக்கடி முத்தம் கொடுப்பதால் உடலுக்கு பல நன்மைகள் இருந்தாலும் உரிய அனுமதி இல்லாமல் மனைவியிடமோ அல்லது காதலியிடமோ உதட்டில் முத்தம் கொடுக்க முயற்சி செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால் இதுதான் நிலைமையாக இருக்கக் கூடும்.