மீண்டும் ஜல்லிக்கட்டு தடை வருமா? சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணை!!
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களில் மரபு வழி விளையாட்டு ஆகும். இந்த போட்டிகள் களை மாடுகளை வைத்து நடத்தப்படும் வீர விளையாட்டுகளில் ஒன்றாகும்.
மேலும் களை மாட்டை ஓடவிட்டு அதனை வீரர்கள் அடங்குவது இந்த விளையாட்டின் சிறப்பாக்கும். அதனையடுத்து ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு புதுகோட்டை மாவட்டம் சொர்க்க பூமியாக சருதப்படுகிறது.
மேலும் தமிழர்களின் வீர விளையடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விளையாட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் நடைபெறும்.
இந்த வீர விளையாட்டு நாமக்கல், சேலம், தருமபுரி, திருவண்ணாமாலை, திருச்சி, தேனி போன்ற மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் பொங்கல் திருநாளை தொடர்ந்து நடத்தப்படும். இந்த போட்டிகள் உலக புகழ் பெற்ற விளையாட்டு ஆகும்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதற்கு காரணம் பீட்டா என்ற விலங்குகள் நல அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து.
அதனையடுத்து பல போராட்களுக்கு பின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடையில்லை என்று தீர்ப்பளித்தது. மேலும் அதற்குக்கான புதிய திருத்த சட்டத்தை அறிவித்தது.
அதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு முதல் 2022 வரையிலான காலத்தில் பல்வேறு பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. மேலும் அந்த போட்டிகள் தொடர்பான திருத்தச் சட்டங்களின் மூலம் மாட்டு வண்டி பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளித்திருந்தது.
இந்த தீர்ப்பை பீட்டா எதிர்த்து மனு தாக்கல் செய்து இருந்தது. மேலும் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யதுள்ளது.