இளைஞருடன் உல்லாசமாக இருந்த பொழுது பெண் மரணம்! அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்!!
இளைஞர் ஒருவருடன் உல்லாசமாக இருந்த நேரத்தில் 40 வயதுள்ள பெண் ஒருவர் மரணம் அடைந்தது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மரணம் என்பது எப்பொழுது நிகழும் எந்த நேரத்தில் நிகழும் என்பது யாருக்குமே தெரியாத ஒன்று. சிலருக்கு வகபத்தில் மரணம் ஏற்படுகின்றது. இன்னும் சிலருக்கு தூக்கத்தில் மரணம் ஏற்படுகின்றது. இன்னும் சிலருக்கு நடக்கும் பொழுது.கூட மரணம் ஏற்படுகின்றது.
மரணம் ஏற்படுவது முன்கூட்டியே அறிந்து கொண்டால் நம்மை மரணத்தில் இருந்து காப்பாற்றி கொள்ளலாம். ஆனால் அந்த ஒன்று மற்றும் யாருக்கும் தெரியாது. ஆனால் இங்கு 40 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம்.
கோவை மாவட்டத்தில் உள்ள வடவள்ளியில் வசித்து வரும் 40 வயது பெண் ஒருவருக்குத்தான் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது. இந்த 40 வயது பெண்ணுக்கு திருமணம் ஆகி விட்டது. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த பெண்ணின் இரண்டு மகள்களும் வெளியே சென்ற பிறகு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திருமணம் ஆகாத ஒரு இளைஞருடன் உல்லாசத்தில் இருந்துள்ளார்.
அந்த சமயம் திடீரென்று அந்த பெண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். என்ன செய்வது என்று தெரியாமல் அந்த இளைஞர் அருகில் நின்று அழுது கொண்டிருக்க வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய அந்த பெண்ணின் மகள்கள் இருவரும் அதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து அந்த மயக்கமடைந்த பெண்ணை மீட்டு மகள்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தனியார் மருத்துவமனையில் 40 வயது பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறினர். பின்னர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற பொழுது அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினர்.
இதையடுத்து நிகழ்ந்த சம்பவத்தை குறித்து வடவள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த பெண் மாரடைப்பு ஏற்பட்டதால் தான் உயிரிழந்தாரா அல்லது கொலை செய்து விட்டார்களா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.