14ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல்… தமிழக அரசு அதிரடி உத்தரவு… காரணம் இதுதான்…
வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் வேலை வாய்ப்பு முகாம், பரிசு போட்டிகள், விளையாட்டுகள் போன்று பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன்
ஒரு பகுதியாக வரும் 14ம் தேதி பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு முதல்வரின் பிறந்தநாளின் பொழுது இனிப்பு பொங்கல் வழங்கப்படும். அந்த வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.
கடந்த ஜூன் மாதம் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூறாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அந்த நாள் அதாவது ஜூன் 3ம் தேதி பள்ளிகள் இல்லாத காரணத்தினால் தற்பொழுது ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.