இந்தியா-பாரத் பிரச்சனையில் சிக்கிக் கொண்ட தோனி!!! முகப்பு படத்தை மாற்றியதால் ஆதரவு அளிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது!!!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ் தோனி அவர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்பொழுது வைத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அடுத்த வருடம் அதாவது 2024வது வருடம் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலுக்கு தயாராகும் விதமாக நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி கட்சி உள்பட 28 கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக ஒன்றிணைந்து உள்ளது.
இந்நிலையில் ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்ட இந்தியா என்ற வார்த்தைக்கு பதிலாக பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாரதம் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் உள்பட பல அமைப்புகள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றது. இந்த கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக அரசில் பாஜக கட்சியை சேர்த்த தலைவர்களும் வழிமொழிந்தனர்.
இதையடுத்து குடியரசுத் தலைவர் அவர்களின் ஜி20 மாநாட்டுக்கான அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரதம் என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. அதே போல பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் இந்தோனேசிய பயணத்துக்கான நிகழ்ச்சி நிரலில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரதம் என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. இந்தியாவிற்கு பதிலாக பாரதம் என்று அச்சிடிக்கப்பட்டது தற்போழுது பெரும் சர்ச்சையாக உருவெடுத்து உள்ளது.
மத்திய அரசு கொண்டுவரவுள்ள இந்த பெயர் மாற்றத்திற்கு நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில் நாடு மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் கேப்டன் கூல் எம் எஸ் தோனி அவர்களின் புதிய முகப்பு புகைப்படம் இணையத்தில் பேசும் பொருளாகி உள்ளது.
அதாவது எம் எஸ் தோனி அவர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தின் கொண்டாட்டத்தின் பொழுது பாரத் என்ற வார்த்தை இடம்பெற்ற புகைப்படத்தை முகப்பு படமாக மாற்றியுள்ளார். இதனால் எம்.எஸ் தோனி அவர்கள் மத்திய அரசின் பெயர் மாற்றத்திற்கு ஆதரவு அளிப்பதாக தகவல்கள் பரவி வருகின்றது.