துக்கம் விசாரிக்க சென்ற இடத்திலுமா கட்டிப்பிடி வைத்தியத்தை பின்பற்றுவது?
பிரபல கவிஞரும், நடிகருமான சிநேகனின் செயல்பாடு தற்போது இணையத்தில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் சிநேகன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதிமய்யம் வேட்பாளராக களத்தில் போட்டியிட்டவரும் கூட.., இவர் கடந்த வாரம் ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித் குடும்பத்தினரை சந்தித்து தனது கட்சியினர் மற்றும் பிரபலமாக டிக் டாக் இணையதளத்தில் கவிதை, ஊக்குவிப்பு வீடியோக்களை வெளியிட்டுவருபவரும் உடன் வந்திருந்தார்.
அப்போது துக்கம் விசாரிக்க வந்த இடத்தில் சினேகன் அந்த பெண்ணின் கையை பிடித்து இருந்ததும், அவரின் தோளில் தனது கையை வைத்து இருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரல் ஆகிவருகின்றன. பலரும் தங்களுக்குள் எவ்வளவு நெருக்கம் இருந்தாலும் இப்படியா நடந்து கொள்வது என்றும், சிநேகன் பெண்ணிடம் அத்துமீறி அநாகரிகமாக நடந்துள்ளார் என்றும் அதனால்தான் அந்த பெண் எழுந்து பின்னால் சென்றுவிட்டார் என்றும் விமர்ச்சித்து வருகின்றனர்.
தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. துக்கம் விசாரிக்க சென்ற இடத்திலுமா கட்டிப்பிடி வைத்தியத்தை பின்பற்றுவது?