நாளுக்கு நாள் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் தமிழக அரசும்,தன்னார்வலர் அமைப்புகளும் பல்வேறு நிவாரண மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சென்னையில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக தன்னார்வலர்களை ஒன்று சேர்க்க புதிய இயக்கத்தை தொடங்கி உள்ளார்.
தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து கொண்டே வருகிறது.
கடந்த சில நாட்களாக தினமும் 1000 க்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.இவ்வாறு கடுமையான பாதிப்புகளை சென்னை சந்தித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கொரோனா பரவலை குறைக்க தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் வகையில் நாமே தீர்வு என்ற இயக்கத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி உள்ளார்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இதன் மூலம் தன்னார்வலர்களை ஒன்றிணைத்து மக்களுக்கு தேவையான உணவுகளை வழங்குதல், வீடுகளில் இருக்க அறிவுறுத்தல், மருத்துவ உதவி செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க நாமே தீர்வு மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.