ரீல் செய்வதற்காக குழந்தையை விற்று ஆப்பிள் போன் வாங்கிய தம்பதி…
மேற்கு வங்கம் மாநிலத்தில் ரீல்ஸ் எடுப்பதற்காக பெற்ற குழந்தையை விற்று தம்பதி ஆப்பிள் போன் வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.
தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த தற்போதைய காலத்தில் மக்கள் அனைவரும் ஸ்மார்ட்போன்களை வாங்கிக் கொள்கின்றனர். பொழுது போக்கிற்காக நாம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்திய காலம் சென்று தற்பொழுது ஸ்மார்ட் போன்கள் நம்மை பொழுது போக்கிற்காக பயன்படுத்தும் காலத்திற்கு வந்துவிட்டது.
அனைவரும் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்று இந்த ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். சிலர் சமையல் செய்து பிரபலம் அடைகின்றனர். சிலர் விமர்சனம் செய்து பிரபலம் அடைகின்றனர். சிலர் கோமாளி தனமாக சில செயல்களை செய்து பிரபலம் அடைகின்றனர். இது போல பலரும் தங்களுக்கு உண்டான தனித் திறமைகளை வைத்து பிரபலம் அடைந்து வருகின்றனர்.
அந்த வரிசையில் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற தளங்கள் இந்தியாவில் பயனர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு முன்பாக டிக்டாக் செயலி அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் டிக்டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்ட பின்னர் இந்தியாவில் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளின் ஆதிக்கம் அதிகமாகி விட்டது.
சமூக வலைதளங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்றால் நல்ல தரத்தில் வீடியோ எடுத்து பதிவிட வேண்டும். அப்பொழுது தான் பார்க்கும் பயனர்களை வீடியோ கவரும். இதையடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோவை அதிக தரத்துடன் பதிவு செய்வதற்காக மேற்கு வங்க மாநிலத்தில் தம்பதி ரீல்ஸ் வீடியோ பதிவு செய்வதற்காக தங்களின் குழந்தையை விற்று ஆப்பிள் போன் வாங்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஜெய்தேவ் – சதி என்ற தம்பதிக்கு திருமணமாகி ஏழு வயதில் மகளும், 8 மாத ஆண் குழந்தையும் உள்ளது. இவர்கள் இன்ஸ்டாகிராம் செயலியில் அடிக்கடி ரீல்ஸ் செய்வது வழக்கம். இதையடுத்து நல்ல தரத்தில் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து அப்லோட் செய்ய வேண்டும் என்று தனது 8 மாத ஆண் குழந்தையை விற்று ஜெய்தேவ் – சதி தம்பதி ஐ போன் வாங்கியுள்ளனர்.
இதையறிந்த மேற்கு வங்க காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஜெய்தேவ் – சதி தம்பதியை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இது குறித்து மேற்கு வங்க காவல் துறையினர் “ஜெய்தேவ்-சதி என்ற தம்பதி 8 மாத ஆண் குழந்தையை விற்று ஐபோன் வாங்கினர். தந்தை ஜெய்தேவ் அவர்கள் மது வாங்குவதற்கும் ஐ போன் வாங்குவதற்கும் 8 மாத ஆண் குழந்தையை விற்றுள்ளனர். மேலும் 7 வயது பெண் குழந்தையையும் விற்க முயற்சி செய்தனர்” என்று கூறியுள்ளனர்.