‘சொன்னதை செய்யும், சொல்வதை செய்யும் அரசு திமுக’- தேர்தல் அறிக்கையை வெளியிட்டது திமுக!
வருகின்ற ஏப்ரல் 19முதல் ஜுன் 1ஆம் தேதி வரை ஏழுக்கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக கூட்டணியை உறுதி செய்வது, சின்னத்தை வெளியிடுவது, வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது என முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றனர்.
தேர்தல் என்றாலே மக்களின் மனதில் தோன்றும் ஒரு விஷயம் கலர் கலராக அரசியல் கட்சிகள் அறிவிக்கும் தேர்தல் அறிக்கை தான்.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களது கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை மையமாக கொண்டு திமுக தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது கனிமொழி தலைமையிலான ஆலோசனை குழு.
அவ்வாறு தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை சொன்னதை செய்வோம், சொல்வதை செய்வோம் என்ற அடிப்படையில் செயல்படுகிறது திமுக அரசு என தனது உரையை தொடங்கிய முதல்வர் ,
சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்படும், தேசிய நெடுஞ்சாலையில் சுங்கசாவடிகள் அகற்றப்படும், டீசல் விலை 65யை ஒட்டியும் ன, பெட்ரோல் விலை 70யாகவும் நிர்ணயம் செய்யபடும், வங்கிகளில் குறைந்தபட்ச தொகையில்லாமல் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும், மாணவர்களுக்கான வட்டி கடன் நீக்கப்படும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பத்து லட்சத்திற்க்கும் அதிகமான கடன் வழங்கபடும், சமையல் சிலிண்டரின் விலை 500ஆக நிர்ணயம் செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.