ஜாக்கெட் இல்லாமல் நடிகை சதா வெளியிட்ட புகைப்படம்
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவரான நடிகை சதா கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதே திரைப்படத்தில் தான் ஜெயம் ரவி கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அறிமுகமான இருவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அந்த நேரத்தில் நடிகை சதா தோற்றத்தை வைத்து, பலரும் இவர் தென்னிந்திய பெண் என்றே கூறி வந்தனர். அந்த அளவுக்கு அவருடைய தோற்றமானது ஒரு தென்னிந்திய பெண்ணை போலவே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றி பெற்ற ஜெயம் படத்தை தொடர்ந்து, அந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டது.அந்த வகையில் ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்தில் நித்தின் நடித்திருந்த நிலையில், கதாநாயகியாக மீண்டும் சதா தெலுங்கில் நடித்திருந்தார். ஜெயம் படத்தில் சிறப்பாக நடித்திருந்த முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதையும் பெற்றார்.
தமிழில் ‘ஜெயம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, உள்ளிட்ட பல படங்களில் அஜீத், விக்ரம், ஜெயம் ரவி மற்றும் மாதவன் என தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல், நடிகை சதா, தெலுங்கு, இந்தி, கன்னடம், உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த சதா, திடீரென பட தயாரிப்பிலும் இறங்கினார். இதற்காக அவர் வங்கிக் கடன் வாங்கி 2018 ஆம் ஆண்டு டார்ச் லைட் படத்தை தயாரித்தார்.
அவரே நடித்திருந்த ‘டார்ச் லைட்’ திரைப்படம் தோல்வி அடைந்தது. இந்த படத்தில், அவர் ஒரு பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் கணவனை காப்பாற்ற பாலியல் தொழிலாளியாக மாறும் ஒரு பெண், பின்பு ஏன் கணவரையே கொலை செய்ய துணிகிறாள் என்பதை பரபரப்பான காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு வேறு படவாய்ப்புகளும் இல்லாமல் போனது.
அதனைத்தொடர்ந்து நடிகை சதா நீண்ட இடைவெளிக்கு பின் எலி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
30 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சதா, தான் சம்பாதித்த பணத்தை வைத்து மும்பையில் ஓட்டல் பிசினஸ் ஒன்றை தொடங்கினார். எர்த்லிங்ஸ் கபே என்கிற பெயரில் 4 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சதாவும் பெரும்பாலான நேரம் இந்த கபே-வில் இருக்கிறார். தன்னுடைய வியாபாரத்தை பார்த்து வந்தார்.
அந்த சமயத்தில் இந்த ஹோட்டல் பிஸினஸில் ஏதோ பிரச்சனை என்றும் சமீபத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்கிறாரோ என்றும் பலரும் பேசி வந்தனர். அந்த வகையில் திரையிலகில் பிரபலமாக உள்ள நடிகைகளை போலவே இவரும் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் ஜாக்கெட் இல்லாமல் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.