புதிய கொரோனா வேரியன்ட்!! வேகமாக பரவுவதால் மக்கள் அச்சம்!!
சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவ னத் தொடங்கியுள்ளதால் சீன மக்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த புதிய கொரோனா வேரியன்ட் தொற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. இன்றளவும் கொரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகின்றது. பல வகைகளாக பிரிந்த கொரோனா தொற்று பலவிதமான அறிகுறிகளுடன் மக்களை தாக்கி வருகின்றது. இதையடுத்து சீனாவில் புதிய கொரோனா தொற்று பரவி வருவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மக்களுக்கு தடுப்பூசி போடுவதையும் சீன அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகின்றது.
சீனாவில் ஜூன் மாதத்தில் இந்த புதிய வகை கொரோனா தொற்று உச்சத்தை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே ஓமிக்ரான் வைரஸின் புதிய வேரியன்ட் XBB வகை கொரொனா தொற்றால் சீன மக்கள் பாதிக்கப்பட்டு வருவதை அடுத்து இதுவரை சுமார் 4 கோடி மக்களுக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வாரத்திற்கு சுமார் 6.5 கோடி பேரை இது பாதிக்கும் என்று தகவல் கிடைத்துள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜீரோ கோவிட் திட்டம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பிறகு ஏற்படும் மிகப் பெரிய கொரோனா அலை இது ஆகும். முன்னர் ஏற்பட்ட கொரோனா அலையின் பொழுது ஒரே நாளில் அதிகபட்சமாக சுமார் 3.7 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
புதிதாக ஏற்பட்டுள்ள XXB திரிபு வேரியன்ட் கொரோனா தொற்றானது ஒமிக்ரான் BA.2.75 மற்றும் BJ.1 ஆகிய தொற்றுகளின் ஹைப்ரிட் வேரியன்ட் ஆகும். இந்த XBB வேரியன்ட் கொரோனா தொற்று BA.2.75 அதிக வேகமாக பரவும் என்று கூறப்படுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு திறனை வீரியம் கொண்டு அழிக்கும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் XXB கொரோனா வேரியன்ட் தொற்றை கண்டறிய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அதற்குள் இந்த XBB திரிபு வேகமாக செயல்பட்டு எளிதில் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று தகவல் கிடைத்துள்ளது.
இந்த புதிய XBB கொரோனா திரிபு நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தவுள்ளது. இதையடுத்து இந்த புதிய XBB திரிபு ஏற்படுத்தும் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக சீன அரசு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.