கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் இதயங்களில் தஞ்சம் புகுந்தவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா. நடிகர் சிவகார்த்திகேயன்,சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் நடிகை ஸ்ரீதிவ்யா மிகவும் பிரபலமாகினார்.
இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் நடிப்பில் வெளியான காக்கிச்சட்டை, ஈட்டி, ஜீவா போன்ற படங்களில் தனித்துவமான கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் அவர் நடித்திருந்தாலும் ஆரம்பத்தில் கிடைத்த வரவேற்பு போல பின்னர் தமிழக ரசிகர்கள் மத்தியில் அவருக்கு கிடைக்கவில்லை.
இதனால் தமிழ் திரையுலகில் இவரும் ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில் தான் நடிகை ஸ்ரீதிவ்யாவின் தங்கையான ஸ்ரீ ரம்யாவும் கடந்த 2013 ஆம் ஆண்டு யமுனா என்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அவர் நடித்த முதல் படத்திலேயே படு கிளாமர் காட்டி ரசிகர்களை வளைத்து போட்டுள்ளார்.
இதனையடுத்து அவருக்கும் பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் தற்போது நடனம் என்ற பெயரில் அவருடைய ஆண் நண்பர் ஒருவருடன் கட்டி உரசி இளைஞர்களை சூடேற்றும் வகையில் ஸ்ரீ ரம்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீ ரம்யா அவரது ஆண் நண்பருடன் இணைந்து ஆட்டம் போடும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் படு வைரலாக பரவி வருகிறது.