என் தற்கொலைக்கு சீமான் தான் காரணமென வீடியோ வெளியிட்டு விஜயலட்சுமி தற்கொலை முயற்சி செய்து கொண்டுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் அவசர பிரிவில் கவலைக்கிடமாக உள்ளார். ஃபிரண்ட்ஸ், பாஸ் என்ற பாஸ்கரன், மீசையை முறுக்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் விஜயலட்சுமி.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் தற்போது சென்னை திருவான்மியூரில் வசித்து வந்தார். சீமானுக்கும் இவருக்கும் தொடர்பு இருந்ததாகவும், சீமான் தன்னை ஏமாற்றியதாகவும் கூறி அவர்கள் தொடர்பு இருந்ததற்கான ஆதாரத்தையும் வெளியிட்டிருந்தார். சீமானை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திய அந்த வீடியோ பதிவில், தான் கடும் மன அழுத்தத்தில் உள்ளதாகவும், சீமான் மற்றும் அவரது கட்சி சார்பாக அழுத்தங்கள் தருவதாகவும் கூறியிருந்தார்.
அதில் அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளேன். கடந்த நான்கு மாதங்களாக சீமான் மற்றும் சீமானின் கட்சியினரும், மேலும் பனங்காட்டு படை கட்சி “ஹரி நாடார்” அவர்களும் கடுமையான அழுத்தங்கள் தரப்பட்ட தாகவும், தான் இப்போது மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன், இதுதான் எனது கடைசி வீடியோ பதிவு என்று கூறியிருந்தார். என் குடும்பத்திற்காக தான் எவ்வளவு நாள் தாங்கிக் கொண்டிருந்தேன். அதிக நாள் வாழ வேண்டும் என நினைத்தேன், தற்போது என்னால் முடியவில்லை ஆனால் நான் போகிறேன் என்று கூறியிருந்தார்.
மேலும் சீமான் மீது வழக்கு போடப்பட்டு முன்ஜாமீன் கூட வழங்கக்கூடாது எனவும், அவர் தப்பிக்கவே கூடாது என்று கண்ணீருடன் அந்த வீடியோ பதிவில் கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.