பிக்பாஸ் சீசன் 6 ல்களமிறங்கும் ஜீ தமிழ் சீரியல் நடிகை! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
விஜய் டிவியில் ஹாட்ரிக் ஹிட் அடித்த ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இது கடந்த ஐந்து சீசன் ஆக மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது விரைவில் பிக்பாஸ் சீசன் 6 வர தயாராகி கொண்டுள்ளது. அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று இந்த நிகழ்ச்சியின் துவக்க விழா நடைபெறவுள்ளது.
இதில் போட்டியாளராக வருபவர்களின் பெயர்கள் தற்போது வெளியாகி கொண்டிருகின்றது.அதில் ஜிபி முத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.அவர்களின் பெயரில் ஜீ தமிழ் சத்யா சீரியல் நடித்து வரும் ஆயிஷாவும் இடம்பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.