ரஜினிலா வேண்டாம் …தனுஷ் தான் வேண்டும்……. அடம்பிடிக்கும் பிரியங்கா மோகன்!!
பிரியங்கா மோகன் முதன் முதலில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் தான் படத்தில் நடித்தார். அப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இவ்வாறு டாக்டர் படத்தில் முதலில் நடித்த பொழுது இவரையும் இயக்குனர் நெல்சனையும் வைத்து அரசியல் புரசலாக பேசி உள்ளனர். அதனால் இவர் மீண்டும் நெல்சன் படத்தில் நடிக்க போவதில்லை என தெரிவித்ததாக சினிமா வட்டாரங்கள் கூறியது. அதேபோல நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் பிரியங்கா மோகனை நடிக்க கேட்டுள்ளனர். ஆனால் பிரியங்கா மோகன் ரஜினியுடன் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டார். ஏனென்றால் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் நடித்தால் அரசல் புரசலாக பேசுவர். அதனால் நடிக்கப் போவதில்லை என மறுப்பு தெரிவித்து விட்டார். அதனை அடுத்து தற்பொழுது தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார். ஜிவி பிரகாஷ் படத்தில் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப் பிடிப்பானது அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி தொடங்க உள்ளது. தனுஷின் மாமனாரான ரஜினிகாந்த் உடன் நடிப்பதற்கு நோ சொல்லிவிட்டு மருமகனுக்கு எஸ் சொன்னது சினிமா திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.