நாள்: சார்வரி வருடம், ஐப்பசி 05 ஆம் நாள், புதன் கிழமை (21/10/2020)
திதி: பஞ்சமி பிற்பகல் 03:17 வரை பின்பு சஷ்டி
நட்சத்திரம்: கேட்டை காலை 08:31 வரை பின்பு மூலம்
சந்திராஷ்டமம்: கிருத்திகை
யோகம்: சித்தயோகம் காலை 08:31 வரை பின்பு மரணயோகம்
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
நல்ல நேரம்:
காலை: 09:15 – 10:15
மாலை: 01:45 – 02:45
தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு: 12:00 – 01:30 PM
குளிகை: 10:30 AM – 12:00 PM
எமகண்டம்: 07:30 – 09:00 AM
வழிபாடு: பெருமாளை வழிபட சுபம் உண்டாகும்
ராசி பலன்கள்:
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே! உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். நிதி உதவி கிடைக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பேசும் வார்த்தைகளில் நிதானம் வேண்டும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே! தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மனவருத்தங்கள் நீங்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானம் வேண்டும். கணவன் மனைவி இடையே உறவு மேம்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே! எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்படலாம். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்தி வரும். சுபகாரியங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சில காரியங்களில் இருந்துவந்த கால தாமதங்கள் நீங்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களே! கலை தொடர்பான செயல்களில் ஆர்வம் காண்பீர்கள். வாரிசுகளிடம் நிதானம் வேண்டும். கொழுப்புகளும் பொறுப்புகளும் அலைச்சல்களும் அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே! குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களே! எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். சொத்துப் பிரிவினை செயல்களில் கவனம் வேண்டும். பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டாகும். எதிரிகளை வெல்வீர்கள். சகோதரர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களே! உத்யோகத்தில் சாதகமான சூழல் அமையும். கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். இன்று உங்களுக்குப் புத்துணர்ச்சியான நாள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களே! புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வியாபாரத்தில் புதியவர்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். பொன், பொருள் வாங்க ஆகும் காண்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களே! வியாபாரத்தில் முதலீடுகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உடல் சோர்வு உண்டாகும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது.
மகரம்:
மகர ராசிக்காரர்களே! கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகனப் பயணங்களின்போது கவனம் வேண்டும். மற்றவர்களின் கருத்துகளை வரவேற்பீர்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களே! மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியங்கள் நடைபெறும். சூழ்நிலைகளைப் புரிந்து நடப்பது நல்லது. உடன்பிறப்புகளின் மூலம் உதவிகள் கிடைக்கும். பொது சேவையில் இருப்பவர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களே! வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். திருமண வரம் கைகூடும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாள்.