நாள்: சார்வரி வருடம், ஐப்பசி 11 ஆம் நாள், செவ்வாய் கிழமை (27/10/2020)
விரதம்: சர்வ ஏகாதசி
திதி: ஏகாதசி பிற்பகல் 01:34 வரை பின்பு துவாதசி
நட்சத்திரம்: சதயம் காலை 09:45 வரை பின்பு பூரட்டாதி
சந்திராஷ்டமம்: ஆயில்யம்
யோகம்: மரணயோகம்
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
நல்ல நேரம்:
காலை: 07:45 – 08:45
மாலை: 01:45 – 02:45
தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு: 03:00 – 04:30
குளிகை: 12:00 – 01:30
எமகண்டம்: 09:00 – 10:30
வழிபாடு: பெருமாளை வழிபட சுபம் உண்டாகும்
ராசி பலன்கள்:
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே! உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காண்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே! வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான சில முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய செயல்பாடுகளில் முன்னேற்றம் காண்பீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே! வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழல் நிலவும். உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களே! உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும். உத்தியோகத்தில் கவனம் வேண்டும். மனதில் குழப்பமான சூழல் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே! உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை காண்பீர்கள். பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காண்பீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். நண்பர்களிடம் இருந்து உதவிகள். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களே! வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவியிடையே இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். புது விதமான அனுபவங்கள் கிடைக்கும். சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் கிடைக்கும். சுப செய்திகள் வந்து சேரும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களே! தடைப்பட்டுவந்த செயல்பாடுகள் நிறைவேறும். வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களை கற்பீர்கள். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் தெளிவு தோன்றும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களே! குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை காண்பீர்கள். வாரிசுகளின் மூலம் லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். சில காரணங்களால் மனதில் மகிழ்ச்சி தோன்றும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களே! உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். செலவுகளை குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களே! உத்தியோகத்தில் இருந்து வந்த பணி சுமைகள் குறையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். திருமண வரன் கைகூடும். வாகன செலவுகள் ஏற்படலாம்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களே! புது விதமான சிந்தனைகள் தோன்றும். பொதுவான கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. செயல்பாடுகளில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் நன்மை உண்டாகும். மனதில் சில கவலைகள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களே! திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் லாபம் கிடைக்கும்.