நாள்: சார்வரி வருடம், ஐப்பசி 12 ஆம் நாள், புதன் கிழமை (28/10/2020)
விரதம்: பிரதோஷம்
திதி: துவாதசி பிற்பகல் 02:58 வரை பின்பு திரயோதசி
நட்சத்திரம்: புரட்டாதி பிற்பகல் 12:43 வரை பின்பு உத்திரட்டாதி
சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்
யோகம்: அமிர்தயோகம் பிற்பகல் 12:43 வரை பின்பு சித்தயோகம்
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
நல்ல நேரம்:
காலை: 09:15 – 10:15
மாலை: 04:45 – 05:45
தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு: 12:00 – 01:30 PM
குளிகை: 10:30 AM – 12:00 PM
எமகண்டம்: 07:30 – 09:00 AM
வழிபாடு: சிவபெருமானை வழிபட நன்மை உண்டாகும்
ராசி பலன்கள்:
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே! உயர் அதிகாரிகளின் ஆலோசனை பெறுவது நல்லது. புதுவிதமான நம்பிக்கை தோன்றும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காண்பீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே! பேசும்போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே! வியாபாரம் ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழிலில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் கவனம் வேண்டும். துணைவரின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களே! உத்தியோகத்தில் மேன்மையான சூழல் நிலவும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். மகிழ்ச்சியான சூழல் நிலவும். சுபகாரிய செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். மனக்கசப்புகள் வந்து நீங்கும். செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே! பொதுப் பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முன்கோபத்தை குறைப்பது நல்லது. எடுத்துச் செல்லும் பொருட்களில் கவனம் வேண்டும். வாகனச் செலவுகள் ஏற்படலாம்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களே! நண்பர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பேச்சு சாதுரியத்தின் மூலம் நினைத்ததை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார நிலை மேம்படும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களே! குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்கள் தோன்றி மறையும். முயற்சிக்கேற்ற பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும். சேமிப்புகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களே! திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனை வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வாரிசுகளின் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களே! குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காண்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. சேமிப்புகள் அதிகரிக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களே! பெரியவர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. விளையாட்டுகளில் ஆர்வம் காண்பீர்கள். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். கவனக்குறைவால் சில அசம்பாவிதங்கள் ஏற்படலாம். வாகன பயணங்களின் போது கவனம் வேண்டும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களே! புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். புதுவிதமான அனுபவம் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மற்றவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வீர்கள். செய்யும் செயல்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.
மீனம்:
மீன ராசிக்காரர்களே! கலைஞர்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். வீண் செலவுகள் ஏற்படலாம். மனதில் திருப்தியற்ற சூழல் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும்.