கொரோனாவால் மாரடைப்பு மருத்துவர்கள் எச்சரிக்கை!!
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் ஒரு புதிய வைரஸாக உருமாற்றம் பெறுகிறது. கொரோனா பாதிப்பிற்கு பிறகு பலருக்கு இதயம் சம்பத்தப்பட்ட பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில் உலகாளவிய ஆராய்ச்சிகள், கொரோனா பாதிப்பினால் இதய நோய்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், ரத்தம் உறைவது அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை கூட்டுகிறது என தேசிய தொற்று நோய் கட்டுபாட்டு திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் கூறியுள்ளார்.
இந்தியாவில் சென்ற இரண்டு மாதங்களாக திடீரென இதயம் செயலிழந்து போவதால் இறப்புகள் ஏற்படுவது அதிகரித்துள்ளது. இரண்டு விதமாக இறப்புகள் நேரிடுகிறது. வயதானவர்கள், ஏற்கனவே இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மரணம் உண்டாகிறது. இரண்டாவது வேறு காரணங்களால் ஆரோக்கியமான நபர்களுக்கு அரிதாக மரணம் உண்டாகிறது.
முதல் விதமான பிரச்சினையை, இ.சி.ஜி., 2டி எக்கோ மற்றும் டி.எம்.டி போன்ற இதய சோதனைகள் மூலம் கண்டறிய முடியும். இரண்டாவதை கண்டறிய மரபணு சோதனை, மின் இயற்பியல் சோதனை, நீண்ட இ.சி.ஜி . போன்ற பல்வேறு வழிமுறைகள் தேவை.
முன்னெச்சரிக்கையாக 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை, மற்றும் கொழுப்பு சோதனையை மேற்கொள்ள வேண்டும். 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எலக்ட்ரோ கார்டியோகிராம், எக்கோ கார்டியோகிராம், டிரெட்மில் சோதனை போன்ற சோதனையை வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
மேலும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் வேண்டும். உடல் பருமனை குறைத்து, எடையை பராமரித்து வர வேண்டும். மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். தினமும் 8 மணி நேர உறக்கம் வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துவது கூடாது. மன அழுத்தம், சர்க்கரை, அதிக கொழுப்பு ஆகியவை இருந்தால் அதை கட்டுக்குள் வைக்கவேண்டும்.