நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசை கட்டுபடுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் முதல் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு தற்போது சில தளர்வுகளுடன் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் பொது ஊடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னை அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெருகி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களை தொடர்ந்து, மதுரை மற்றும் தேனியிலும் முழு ஊடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியிருந்த நிலையில் தற்போது இறப்பு, விமானம் மற்றும் ரயில் போன்ற முக்கிய சேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும் எனவும், குறிப்பாக வாகனங்களில் செல்லகூடாது என்றும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், நாளை முதல் வரும் 30 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்ட மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படும் எனவும், ஒரு மாவட்டம் விட்டு மற்றொரு மாவட்டம் செல்வதற்கு இனிமேல் கட்டாயம் இ – பாஸ் வேண்டும் எனவும், குறிப்பாக கார்,பைக் உள்ளிட்ட தனியார் போக்குவரத்துகளுக்கு அனுமதி இல்லை எனவும் இவர் அறிவித்துள்ளார்.