கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் சித்திரை மாதம் வெயிலை விடவும் ஆணி, ஆவணி மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகளவு காணப்படுகிறது. அவ்வாறு அதனைத் தொடர்ந்து ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு அதிகளவு வெப்பச்சலனத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
அதனைப் பொருட்டு, இன்று வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி ,தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில் மழை பெய்ய
வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர் .
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்த செய்தி குறிப்பின்படி:
24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 11 சென்டிமீட்டர் மழையும், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 5 சென்டிமீட்டர் வரை மழை பெய்தது பதிவாகியுள்ளது என கூறினர்.
பூமியின் மேற்கு திசையில் காற்றின் வேகம் மாறுபட்டுள்ளது என்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ,ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும் எனவும்,
தொடர்ந்து அடுத்த நான்கு நாட்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கூறியுள்ளனர்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, மற்றும் தென்காசி,மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி,தேனி, மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வரும் 6,7 ஆம் தேதிகளிலும், திருப்பூர்,தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில்
ஏழாம் தேதியில், மட்டும் கன மழை பெய்யும் என தகவல் கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்சமாக வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் கூறியுள்ளனர்.
வங்கக்கடல், மன்னர் வளைகுடா, குமரி கடல், போன்ற கடலோரப் பகுதிகளில், வடக்கு மற்றும் தென்மாவட்ட கடலோர மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், இதில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வரும் ஏழாம் தேதியில் வீசும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.