முழுவதும் அப்படி நடிக்க தயார்? இயக்குனருக்கு ஓகே சொல்லிய நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா.இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மனசினகாரே என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக திரைப்படத்துறைக்கு அறிமுகமானர். இதனையடுத்து கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இதனையடுத்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வந்தார்.சமீபகாலமாக இவர் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா திடீரென காமெடி படத்தில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளது.தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் இவர் நடிகர் ரஜினிகாந்த்,அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.அந்த வகையில் இவர் நடித்த அறம் திரைப்படம் இவரை மேலும் பிரபலமாக்கியது.
![முழுவதும் அப்படி நடிக்க தயார்? இயக்குனருக்கு ஓகே சொல்லிய நயன்தாரா 2 Nayanthara-Live Tamil News Latest Tamil News Today](https://www.livetamilnews.com/wp-content/uploads/2021/07/nayanthara-300x188.jpg)
இவ்வாறு தொடர்ந்து நல்ல கதையம்சங்களை கொண்ட படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த மற்றும் நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.மேலும் இவருடைய காதலர் விக்னேஷ் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் மேலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் அடுத்து நடிக்கவுள்ள படங்கள் குறித்து தகவல்கள் கசிந்துள்ளது.
![முழுவதும் அப்படி நடிக்க தயார்? இயக்குனருக்கு ஓகே சொல்லிய நயன்தாரா 3 Nayanthara-Live Tamil News Latest Tamil News Today](https://www.livetamilnews.com/wp-content/uploads/2021/07/06-nayantara-anamika-stunt-300x225.jpg)
நயன்தாரா அடுத்து 3 படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருநதாலும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.ஆனால் அவர் அடுத்து நடிக்கவுள்ள படங்களில் ஒன்று முழுமையான காமெடி படம் என்று மட்டும் தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து வெளியான தகவலில் இந்த படத்தில் அவர் முழுமையான காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
![முழுவதும் அப்படி நடிக்க தயார்? இயக்குனருக்கு ஓகே சொல்லிய நயன்தாரா 4 Nayanthara-Live Tamil News Latest Tamil News Today](https://www.livetamilnews.com/wp-content/uploads/2021/07/Nayan_0_0-300x169.jpeg)
நகைச்சுவை நடிகர் கதாநாயகனாக நடித்த தெனாலிராமன் மற்றும் எலி உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கத்தில் தான் இவர் நடிக்க ஒப்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.முழு நேர காமெடி பட கதை ஒன்றை இயக்குனர் யுவராஜ் நடிகை நயன்தாராவிடம் கூற கதை பிடித்திருந்ததால் முழு நேர காமெடி படமாக இருந்தாலும் அதில் நடிக்க அவர் ஓகே சொல்லி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.