WordPress database error: [Deadlock found when trying to get lock; try restarting transaction]
DELETE FROM `wpuh_options` WHERE `option_name` = '_site_transient_wp_theme_files_patterns-76c4657bef9b1ba2ee9a9cafcf47d9a9'

தமிழகத்தில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்த ஸ்டாலின் போட்ட பக்கா பிளான் – Live Tamil News – Tamil News Today | Online Tamil NewsPaper | Latest Online Tamil News | Tamil News Online | Latest Tamil News | Tamil News Today | Flash News in Tamil| Breaking News in Tamil | Top Tamil News Today | Update News in Tamil | Google News in Tamil | One India Tamil News | Digital News in Tamil | Local Tamil News | Political News in Tamil | Cinema News in Tamil | Sports News in Tamil | லைவ் தமிழ் நியூஸ் | லைவ் தமிழ் செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | பிரேக்கிங் நியூஸ் | பிரேக்கிங் அப்டேட்ஸ் | தற்போதைய செய்திகள் | சற்றுமுன் செய்திகள் | இன்றைய செய்திகள் | அரசியல் செய்திகள் | சினிமா செய்திகள் | விளையாட்டு செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்த ஸ்டாலின் போட்ட பக்கா பிளான்

தமிழகத்தில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்த ஸ்டாலின் போட்ட பக்கா பிளான்

கடந்த அதிமுக ஆட்சியில்  ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் பின்னர் அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடிவு   செய்தது.

அப்போதைய அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என இரண்டாக பிரித்து தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அவர்கள் திட்டமிட்டவாறு ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டுமே அப்போது நடத்தப்பட்டது.நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஆட்சி முடியும் வரையில் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டுமே நடைபெற்ற நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் யாரும் இல்லாத நிலையே நிலவி வருகிறது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ளாட்சி பிரதிநிதிகளை நியமிக்க புதிதாக மீண்டும் உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த திமுக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..மேலும் இது குறித்து திமுக மாவட்ட செயலாளர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பது போல புதியதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களிலும் எந்த ஒரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடத்தி முடிக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் சம்ன இடங்களிலேயே வெற்றி பெற்றன. ஆனால் பெரும்பாலான இடங்களில் கவுன்சிலர் பதவியை கைப்பற்ற அதிமுகவினருக்கு அதிக வாய்ப்பு கிடைத்தது.

அந்தவகையில்  திமுகவுக்கு பாதகமான சில சம்பவங்கள் நடந்தேறின. இந்நிலையில்தான் திமுக புதியதாக பதவியேற்றுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாமா என்று திட்டமிட்டு வருகின்றது. அதேபோல் இதற்கு சாதகமாக புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மேலும் இந்த 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் 6 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கபட்ட அன்று மு க ஸ்டாலின்,அமைச்சர் கே என் நேரு மற்றும் பெரியகருப்பன் உள்ளிட்டவர்களுடன் இது குறித்து விரிவான ஆலோசனை நடத்தியுள்ளார். உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த அன்றே ஸ்டாலின் எதற்கு இவ்வளவு அவசரமாக ஆலோசனை நடத்த வேண்டும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதற்கு காரணம் உள்ளாட்சித் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்று அவருக்கு இருக்கும் ஆர்வமே என்று கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆட்சியில் நடந்தது போல ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என பிரித்து நடத்தாமல் முன்னாள் முதல்வரான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா காலத்தில் நடந்தது போல ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் எதிர்பார்க்கிறார்.

இவ்வாறு இவரின் திட்டப்படி மீண்டும் தேர்தலை நடத்தினார் சொந்த கட்சியினரே பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. அதனால் முதலில் சொந்த கட்சியினரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் மேலும் மூன்று ஆண்டுகள் பதவி காலம் உள்ள நிலையில் திரும்பவும் தேர்தல் நடத்தினால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் திமுக ஆளுங்கட்சியாக இருப்பதனால் அவர்கள் மீண்டும் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறி அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து விவாதிக்க மாவட்டச் செயலாளர்களை ஸ்டாலின் சந்தித்துள்ளார் இது சந்திப்பின்போது மாவட்டச் செயலாளர்களும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மீண்டும் ஒரேடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் ஆர்வம் உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் கடந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அவர்களுக்கு மீண்டும் உறுதியாக வாய்ப்பு அளிப்பதாகவும் உறுதி மொழி அளித்து உள்ளாட்சி அமைப்புகளைக் கலைக்கலாம் என்று மாவட்டச் செயலாளர்கள் ஸ்டாலினுக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.

இதன் மூலமாக அவர்கள்  மீண்டும் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருக்கலாம் என்றும் எடுத்துக் கூறியுள்ளனர் இந்நிலையில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு தமிழகத்தில் மீண்டும் உள்ளாட்சித் தேர்தலை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment