Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

மதுரை ரயில் தீ விபத்து : 5 பேர் பரிதாப பலி – அதிர்ச்சி சம்பவம்!!

மதுரை ரயில் தீ விபத்து : 5 பேர் பரிதாப பலி – அதிர்ச்சி சம்பவம்!!

மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிலிருந்த ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவிலிருந்து சுற்றுலா ரயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மளமளவென எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொண்டனர்.

இந்த தீ விபத்தில் 20க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது. 4 பேர் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில்,

ஆன்மீக சுற்றுலா ரயிலின் பெட்டிகளில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று தீப்பிடித்ததாகவும், ரயில் பெட்டிகளில் காற்றின் வேகத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment