ரசிகர்களை கவரும் கொள்ளை அழகில் மேகா ஆகாஷ்
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் மேகா ஆகாஷ். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு பிரபலமானார்.
அதன்பின் வந்தா ராஜாவாத்தான் வருவேன், பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் குட்டி ஸ்டோரி என மேலும் சில திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.அதுமட்டுமல்லாமல் அவர் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வழக்கமாக மற்ற நடிகைகள் சமூக வலைத்தளங்களை ஆக்டிவாக பயன்படுத்துவது போலவே இவரும் பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுக்கும் வேலையையும் செய்து வருகிறார்.
அந்த வகையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
இது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.