சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெளியிட்ட புதிய புகைப்படம்… நிலவின் படத்தை துல்லியமாக எடுத்து வெளியிட்டுள்ளது…
சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் புதிய புகைப்படத்தை மிகவும் துல்லியமாக எடுத்துள்ளது. விக்ரம் லேண்டர் துல்லியமாக எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ இன்று(ஆகஸ்ட்22) வெளியிட்டுள்ளது.
சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை(ஆகஸ்ட்17) அன்று விடுவிக்கப்பட்டது. அதன் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக நிலவை ஒட்டிய பாதையில் வலம் வந்தது. இதைத் தொடர்ந்து விக்ரம் லேண்டர் கலனின் உயரத்தை படிப்படியாக குறைத்துக் கொண்டு நிலவின் தரைப்பரபிற்கு குறைந்தது 25 கி.மீ தொலைவிலும் அதிகபட்சம் 134 கி.மீ தொலைவிலும் இருக்கும் சுற்றுப்பாதைக்கு விக்கரம் லேண்டர் கொண்டுவரப்பட்டுள்ளது.
விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பொழுது நிலவின் மேற்பரப்பை அறிந்து கொள்வதற்கு தரையிரக்க உதவும் வகையில் எல்.எச்.டி.சி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விக்ரம் லேண்டர் அதிநவீன எல்.எச்.டி.சி கேமராவை பயன்படுத்தி மிகவும் துல்லியமாக கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படத்தை இன்று தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் நாளை மாலை 5.45 மணிக்கு திட்டமிட்டபடி விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.